ஆந்திர மாநிலம்…..
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள குர்ராடா கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசூரிய நாராயணா(30). இவர் அதேபகுதியை சேர்ந்த தேவகி என்ற இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
ஆனால், இவரது காதலை தேவகி ஏற்க மறுத்துள்ளார். இருப்பினும், வெங்கட சூரியநாராயணா இளம்பெண்ணிடம் தனது காதலை ஏற்க வேண்டும் என விடாமல் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், தேவகி நேற்று முன்தினம் தனது ஸ்கூட்டியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது வெங்கட சூரியநாராயணா சாலையில் குறுக்கிட்டு தேவகியை நிறுத்தி காதல் குறித்து மீண்டும் பேசினார். தனது காதலை ஏற்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
ஆனால், தேவகி இதற்கெல்லாம் பயப்படுபவள் நான் இல்லை. நீ என்னை கொலை செய்தாலும் உனது காதலை ஏற்கமாட்டேன் என உறுதியாக கூறினார். இதனால், இருவருக்கும் நடுரோட்டில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் கோபமடைந்த வெங்கட சூரியநாராயணா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தேவகியின் கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டினார்.
இதனால், ரத்த வெள்ளத்தில் சரிந்த தேவகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், அங்கிருந்த பொதுமக்கள் வெங்கட சூரிய நாராயணாவை பிடித்து அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண் நடுரோட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ரத்த வெள்ளத்தில் தேவகி மயங்கி கீழே விழுந்தார். அங்கிருந்த பொதுமக்கள் வெங்கட சூரிய நாராயணாவை பிடித்து மரத்தில் கட்டி வைத்து சரமாரி தாக்கினர். ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த தேவகியை ஆம்புலன்ஸ் மூலம் காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், மருத் துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெத்தபூடி போலீசார் அங்கு சென்று வெங்கட நாராயணாவை கைது செய்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.