குளிக்கும்போது இறந்து போன 17 வயது மாணவி: பள்ளிக்கு கிளம்பும் முன் ஏற்பட்ட பரிதாபம்!!

702

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் குளிக்கும்போது ஏற்பட்ட விபத்தினால் பள்ளி சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

பிரையன் மேரி ராப் (17) எனும் சிறுமிக்கு கடந்த வெள்ளிக்கிழமை காலை 6.45 மணிக்கு பள்ளி செல்வதற்காக கிளம்பி கொண்டிருந்தாள்.அதற்காக குளிக்க சென்ற போது தலைமுடி பாத்டப்பில் உள்ள ஓட்டையில் சிக்கி கொண்டது. தலைமுடியை எடுப்பதற்குள் பாத்டப் நிறைந்து விடவே மூச்சு திணறி அங்கேயே இறந்திருக்கிறார் பிரையன்.

அவரது அன்னை எழுந்து வந்து பார்க்கும் போது பாத் டப்பிலிருந்து நீர் வழிந்த நிலையில் பிரையனின் முடி அதன் நீர் விழும் ஓட்டையில் சிக்கியிருப்பதையும் பிரையன் நீரில் மூழ்கி இறந்திருப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

மேலும் தைராய்ட் பிரச்னைக்காக மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருக்கிறார் பிரையன். அதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிற கோணத்திலும் காவல்துறையினர் இந்த வழக்கை ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும் அவரது தந்தை கூறுகையில், பிரையனிற்கு குளிக்கும் போது மயக்கம் ஏற்பட்டு அதனால் இவ்வாறு நடந்திருக்கலாம் என்று தான் சந்தேகிப்பதாக கூறியிருக்கிறார்.

பிரையனின் உடல் தற்போது உடற்கூறாய்வு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்தபின்தான் இறப்பின் காரணம் தெரிய வரும் என்கிறார்கள் காவல்துறையினர்.

பள்ளிக்குத் தயாரான சிறுமி திடீரென மரணித்த நிகழ்வு அங்குள்ளோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.