தமிழ்நாட்டில் செல்போனை வைத்திருந்த பெண் மீது இடிதாக்கியதில் அவர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வீரலட்சுமி என்ற இளம்பெண் செல்போனை மார்பு பகுதியில் வைத்துபடி வீட்டில் படுத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அருகிலுள்ள தென்னைமரத்தை தாக்கிய இடி, வீரலட்சுமி வைத்திருந்த செல்போனையும் தாக்கியதாக தெரிகிறது.இதில் அவர் செல்போனை வைத்திருந்த மார்பு பகுதி கருகி, தன்னுடைய குழந்தைகள் கண்முன்னே கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த பொலிசார் வீரலட்சுமியின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.