அபிராமிக்கு ஏற்பட்ட கதி

தமிழகத்தில் இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு காதலனுடன் ஓட நினைத்த அபிராமி தனக்காக வழக்கறிஞர்கள் யாரும் வாதாட வராத காரணத்தினால் மிகுந்த வேதனையுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையை அடுத்த குன்றத்தூர் 3-ஆம் கட்டளையை சேர்ந்தவர் விஜய். இவருடைய மனைவி அபிராமி. இவர்களுக்கு அஜய் என்ற மகனும், கார்னிகா என்ற மகளும் இருந்தனர். அபிராமி, தனது கள்ளக்காதலன் சுந்தரத்துடன் சேர்ந்து வாழ்வதற்காக தனது 2 குழந்தைகளுக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார். கணவனையும் கொலை செய்ய முயற்சித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக குன்றத்தூர் பொலிசார் அபிராமி, அவரது கள்ளக்காதலன் சுந்தரம் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை சமீபத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை நேற்று துவங்கியது.

ஆனால் அபிராமி தரப்பில் எந்த ஒரு வழக்கறிஞரும் ஆஜராகத காரணத்தினால் வழக்கு விசாரணை அடுத்து மாதம் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அபிராமி, காஞ்சிபுரம் நீதிமன்றத்துக்கு பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.

சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு வந்த அவர், பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் பொலிசாரிடம் சகஜமாக பேசாமல் இருந்துள்ளார். அதுமட்டுமின்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறைக்கு அழைத்துச் செல்லும்போது கூட அமைதியாகவே இருந்துள்ளார்.

அபிராமி இப்படி இருப்பதற்கு என்ன காரணம் என்று கேட்ட போது, நீதிமன்றத்தில் தனக்காக ஆஜராக வழக்கறிஞர்கள் மற்றும் அப்பா, அம்மா என யாரும் வரவில்லை என்ற வேதனையில் அப்படி இருந்துள்ளார். மேலும் பொலிசார் ஒருவர் கூறுகையில், இந்த வழக்கிற்கு தேவையான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம்.

இதில் அபிராமி மற்றும் கள்ளக்காதலன் சுந்தரன் என இருவருக்கும் தனித்தனியாக குற்றப்பத்திரைக்கை தாக்கல் செய்துள்ளோம். அபிராமிக்கு மட்டும் ஏறத்தாழ 200 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சுந்தரத்துக்கு 150 பக்கத்துக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.