கை, கால்களை கட்டிப்போட்டு பேரனை ஆற்றில் தள்ளி கொ லை செய்த பாட்டி!!

893

65 வயதான சாந்தாம்மா..

பெங்களூரில் கை, கால்களை கட்டிப்போட்டு 10 வயது பேரனை ஆற்றில் தள்ளி கொ லை செய்த பாட்டியை பொலிஸார் கைது செய்துள்ளனர். பெங்களூரை சேர்ந்த 65 வயதான சாந்தாம்மா என்பவர் செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணியளவில், தனது பேரனை கொ ன்றுவிட்டதாக கூறி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார், அவர் கொ லை செய்ததாக கூறிய ஹேமாவதி ஆற்றுக்கு மீட்பு படை வீரர்களை அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர தேடுதல் நடத்திய பொலிஸார் மதியம் 12 மணியளவில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுவனின் ச டலத்தை கண்டெடுத்தனர்.

இதனையடுத்து சாந்தம்மாவை கைது செய்த பொலிஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவருடைய மகளுடன் ஏற்பட்ட த கராறு காரணமாகவே பேரனை கொ லை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

சாந்தம்மாவின் மகளுக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் கணவரை பிரிந்துவிட்டார். அவருக்கு பிறந்தவர் தான் கொ ல்லப்பட்ட 10 வயது சிறுவன் பிரஜ்வால்.

அவனை தன்னுடைய தாயின் வீட்டில் விட்டுவிட்டு அந்த பெண் மறுமணம் செய்துகொண்டு மங்களூரு சென்றுவிட்டார். கடந்த நான்கு மாதங்களாக பேரனை கவனித்துக்கொண்டிருந்த சாந்தாம்மா, மகளின் மறுமணம் குறித்து அடிக்கடி ச ண்டையிட்டு வந்துள்ளார்.

பல சந்தர்ப்பங்களில் வீட்டிற்கு திரும்பி வராவிட்டால் பிரஜ்வாலைக் கொ ன்றுவிடுவேன் என்று சாந்தம்மா தனது மகளை மி ரட்டியுள்ளார். இந்த நிலையில் தான் திங்கட்கிழமை மாலை பள்ளியிலிருந்துக்கு பிரஜ்வாலை வீட்டிற்கு அழைத்து வந்த சாந்தாம்மா, வழியில் இருந்த ஆற்றில் தள்ளி பேரனை கொ லை செய்துள்ளார்.

அதன்பிறகு அவரும் த ற்கொ லைக்கு முயன்றுள்ளார். ஆனால் அங்கிருந்த சிலர் அவரை காப்பாற்றி பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.