கேப்ரியல்லா..

விஜய் டிவி பல பிரபலங்களை உருவாக்கியுள்ளது. சிவகார்த்திகேயன், நெல்சன் என பலரும் சினிமாவுக்கு வருவதற்கு முன் விஜய் டிவியில்தான் பணியாற்றினார்கள். இந்த வரிசையில் வருபவர்தான் கேப்ரியல்லா.

நடனத்தில் ஆர்வமுள்ள கேப்ரியல்லா சிறுமியாக இருக்கும் போதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சில நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.பிக்பாஸ் வீட்டுக்கும் சென்று தனது நடவடிக்கையால் ரசிகர்களை கவர்ந்தார். அந்நிகழ்ச்சி மூலம் இவருக்கு ரசிகர்களும் உருவானார்கள்.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் நிகழ்ச்சியிலிருந்து அவராகவே வெளியேறினார். அந்நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் நடிக்க அவர் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பதால் விஜய் டிவி சீரியல் பக்கம் ஒதுங்கினார். தற்போது ஈரமான ரோஜாவே சீசன் 2-வில் நடித்து வருகிறார்.

மேலும், கட்டழகை சரியாக காட்டும் உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் கேப்ரியல்லாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

