மகன்

சினிமா பட பாணியில் கொ லை செய்யப்பட்ட தாயின் உடல் அருகே இரண்டு நாட்களாக ம கன் அமர்ந்திருந்துள்ள அதி ர்ச்சி சம்பவம் நெல்லையில் நடந்தேறியுள்ளது.

பாளையங்கோட்டையை சேர்ந்த வானமாமலை – விமலா (70) என்கிற தம்பதியினருக்கு 2 மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். மகள்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து கணவரின் வீட்டில் வசித்து வருகின்றனர்.

ரயில்வே துறையில் வேலை செய்து வந்த வானமாமலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்ததால் அவருடைய வேலை மூத்த மகனுக்கு வழங்கப்பட்டது. பணியில் இருந்தபோது அவரும் உ யிரிழந்ததால், அந்த பதவி இளைய மகனான 50 வயது அகிலனுக்கு வழங்கப்பட்டது.

விருதுநகரில் பணி வழங்கப்பட்டதால், அவர் தனது தாயுடன் அங்கு வசித்து வந்தார். அகிலனுக்கு அடிக்கடி மனநலம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இதனால் நான்கு முறை திருமணமாகி 4 பெண்களும் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றுவிட்டனர்.

அதேசமயம் ரயில்வே துறையிலும் மனநலம் சரியில்லை எனக்கூறி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் தனது தாயுடன் விருதுநகரிலேயே வசித்து வந்துள்ளார்.

இவர்கள் பாளையங்கோட்டையில் தங்களுடைய சொந்தமான நான்கு வீடுகளை வாடகைக்கு விட்டிருந்ததால், மாதத்தில் சில நாட்கள் மட்டும் அங்கு சென்று வாடகையை வசூலித்துவிட்டு வருவார்கள்.

அதன்படி சில நாட்களுக்கு முன் வாடகை வசூலிப்பதற்காக பாளையங்கோட்டைக்கு சென்றுள்ளனர். அந்த நேரத்தில் மாடியில் இருந்த நபர் வீட்டை காலி செய்ததால், முன்பணத்தை திரும்ப பெறுவதற்காக அகிலன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. எட்டிப்பார்த்தபோது விமலா இரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்துள்ளார். அருகே அகிலன் அமர்ந்திருந்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது, தனது தாய் இ றந்துவிட்டதாக கூறி அந்த நபரை உள்ளேவிட மறுத்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ஆனால் அவர்களையும் உள்ளே விடாமல் கதவை தாழ்பாள் போட்டுகொண்டு சடலம் அருகிலேயே அமர்ந்திருந்துள்ளார். பின்னர் 2 மணி நேரத்திற்கு பின் பொலிஸார் உ டலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.