கொரோனா காலத்தில் லண்டனில் இடம்பெற்ற, பலரையும் ஈர்த்த திருமணம்!

306

லண்டனில்………

லண்டனில் வித்தியாசமான முறையில் டிரைவ்-இன் நடைபெற்ற இந்து திருமணம் பலரையும் ஈர்த்துள்ளது.

கொரோனா தொற்றுநோய் விதிமுறைகள், கட்டுப்பாடுகள், காரணமாக லண்டன் எசெக்ஸில் 500 ஏக்கர் தோட்டத்தில் நடைபெற்ற இந்த துர்மணத்தை 250 விருந்தினர்கள் கார்களில் இருந்து பார்த்தார்கள்.

அத்துடன் இந்த திருமணம் நிகழ்வு நான்கு மணி நேரம் இடம்பெற்றது.

பிரித்தானியாவில் திருமண நிகழ்வுகள் நடத்த தற்போது 15 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்திருமணவிழா பலரையும் ஈர்த்துள்ளதுடன், இனி பலரும் இத்திருமண நிகழ்வினை பின்பற்றுவர்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.