சச்சினுக்கு இருந்த அந்த வியாதி! கட்டிக்காத்த ரகசியத்தை போட்டுடைத்த கங்குலி

1104

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என அழைக்கப்பட்டு சச்சின் டெண்டுல்கரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியும் 14 வயது முதலே நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

ஒரு காலத்தில் இந்த ஜோடி நின்றாலே எதிர் அணிக்கு வயிற்றில் புளியை கரைத்தது போல ஓரு பயம் இருந்து கொண்டே இருக்கும். அந்த அளவிற்கு எதிர் அணியின் பந்துகளை போட்டி போட்டுகொண்டு நாலாபுறமும் பறக்கவிடுவார்.சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இருவரும் ஓய்வு பெற்றிருந்தாலும் கூட, தற்போதும் அவர்கள் நண்பர்களாகவே இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தன்னுடைய விளையாட்டு கால அனுபவம் குறித்து கங்குலியிடம் சில சுவாரஸ்யமான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அனைத்திற்கும் பதிலளித்து வந்த கங்குலி, சச்சின் குறித்து பேசுகையில், ஒருமுறை இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டிக்காக சென்றிருந்தபோது சச்சின் எனது அறையில் தங்கியிருந்தார்.

  அப்போது இரவு 1.30 மணியளவில் திடீரென கண்ணை மூடிக்கொண்டே சச்சின் எழுந்து நடக்க ஆர்மபித்தார். இதனை பார்த்த நன் பாத்ரூம் செல்கிறார் என நினைத்துக்கொண்டு உறங்கிவிட்டேன். மறுநாள் இரவும் அதேபோல திடீரென சச்சின் எழுந்த நடக்க ஆரம்பித்தார். இதனை பார்த்து பயந்துபோன நான் என்ன செய்வதென தெரியாமல் சச்சின் நடவடிக்கைகளை கவனித்துக்கொண்டே இருந்தேன்.

அங்கும் இங்குமாக நீண்ட நேரம் நடந்துகொண்டிருந்த சச்சின், அங்கிருந்த நாற்காலியில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு, பின்னர் எழுந்து வந்து எனக்கு அருகே படுத்துக்கொண்டார்.

பயத்திலே அன்று இரவு உறங்கிய நான் விடிந்ததும், எனக்கு பயமா இருக்கு, இரவு என்ன செய்தீர்கள் என கேட்டேன். ‘தூக்கத்தில் நடந்தேன்’ என கூலாக கூறினார். அப்பொழுது தான் அவருக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருக்கிறது எனபதை புரிந்துகொண்டேன் என கங்குலி கூறியுள்ளார்.