கேப்ரியல்லா..

விஜய் டிவியின் செல்ல பிள்ளைகளில் கேப்ரியல்லாவும் ஒருவர். விஜய் டிவியில் ஒளிபரப்பாக பல நடன நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவர். சில திரைப்படங்களில் சிறுமியாக நடித்துள்ளார்.

விஜய் டிவி பிரபலம் என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. கேப்ரியல்லாவும் அதை பயன்படுத்தி பிக்பாஸ் வீட்டிற்கு சென்றார். அந்நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்.

ஆனால், அது நடக்கவில்லை. எனவே, மீண்டும் விஜய் டிவி பக்கம் சென்றார்.தற்போது அந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் நடித்து வருகிறார்.

எனவே, தொடர்ந்து பல சீரியல்களில் கேப்ரியல்லா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிடுவதை கேப்ரியல்லா நிறுத்தவில்லை.
