சவுதி அரேபியாவில் சிறு நிறுவனத்தின் முதலாளிக்கு ஓட்டுநராக இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். முதலாளியின் மகளை கவர்ந்து காதலில் விழ வைத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவிற்கு திரும்பிய இளைஞனை நினைத்து வருந்தியுள்ளார் அந்த அரேபிய பெண். காதலால் தவித்து வந்த பெண் காதலனை தேடும் பணியில் ஈடுபட்டார். என்ன செய்வது என்று திணறிய அப்பெண் பெற்றோருக்கு தெரியாமல் நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக வந்துள்ளார்.
பின் காதலனை தேடி கண்டுபிடித்து பதிவு திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். தன் மகள் இந்தியாவில் இருப்பதை அறிந்த அவரது தந்தை, ”என் மகள் காதலனால் கடத்தி வரப்பட்டுள்ளார்” என பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதை தொடர்ந்து அப்பெண்ணை விசாரித்த பொலிசார், ’நான் என் விருப்பத்துடன் தான் காதலனுடன் வந்து திருமணம் செய்துள்ளேன்’ என்று கூறினார். எங்கள் இருவரை சேர்த்து இந்தியாவில் குடியுரிமை வழங்கி வாழவிடுங்கள் என்று அரசிடம் கேட்டுள்ளார்.