சந்தேகத்தால் வந்த வினை : தூக்கில் சடலமாக தொங்கிய காதல் மனைவி!!

1030

தூக்கில் சடலமாக காதல் மனைவி

சென்னையில் பெண் இன்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவை சேர்ந்தவர் சாய்தேஜா (26). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திவ்யஸ்ரீ (22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தம்பதிகள் சென்னை மதுரவாயலில் உள்ள வீட்டில் தங்கியிருந்து வடபழனியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இருவரும் இரவு பணிக்காக சென்றனர். சிறிது நேரத்தில் உடல்நிலை சரியில்லை என்று கூறி திவ்யஸ்ரீ மட்டும் வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டார்.

பணி முடிந்து நேற்று அதிகாலையில் வீட்டுக்கு வந்த சாய்தேஜா காதல் மனைவி திவ்யாஸ்ரீ வீட்டின் உள்ளே தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறினார். பின்னர் சுதாரித்து கொண்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு போன நிலையில் திவ்யஸ்ரீ ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

சம்பவம் குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், கணவர் மீது திவ்யஸ்ரீ அடிக்கடி சந்தேகப்படுவார் என்றும், இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

திவ்யஸ்ரீ செல்போனை பறிமுதல் செய்த பொலிசார், கடைசியாக அவர் யாரிடம் பேசினார்? என்பது குறித்து விசாரித்து வருவதோடு, தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.