சவூதி அரேபியாவில் மேலும் இரண்டு பெண்களிற்கு நேர்ந்த கதி

576

சவூதி அரேபியாவில் மேலும் இரண்டு முக்கிய பெண்ணுரிமை செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையணில் அடைக்கப்பட்டுள்ள ராயிப் பதாவி என்பவரின் சகோதரியான சாமர் பதாவி மற்றும் நசீமா அல்-சதா ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இரண்டு நாட்களுக்கு முன்பு ராணுவத்தினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் சவூதி அரேபியாவில் பெண்ணுரிமை போராட்டங்களின் போது முன்னின்று செயற்பட்டவர்கள் எனவும் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான அனுமதியைப் பெறுவதற்காக முக்கிய பிரசாரத்தின் பின்னணியில் இருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக சவூதியில் பல பெண்ணுரிமை செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு வருகின்ற நிலையில் வெளிநாட்டு சக்திகளுக்காக அவர்கள் பணியாற்றுவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.