சாலை விபத்தில் துடிதுடித்து இறந்த நடிகர் : பிரபல தமிழ் நடிகர், நடிகைகள் இரங்கல்!!

1323

துடிதுடித்து இறந்த நடிகர்

பிரபல தெலுங்கு நடிகர் ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் உயிர் இழந்த நிலையில் பிரபல நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையான ஹரிகிருஷ்ணா சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் அவர் பலியானார்.

ஹரிகிருஷ்ணாவின் மறைவு தமிழ், தெலுங்கு நடிகர்கள் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகர் சரத்குமார் தனது இரங்கல் பதிவில், விபத்தில் ஹரிகிருஷ்ணா மரணமடைந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அவரின் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.

நடிகை கெளதமியின் டுவிட்டர் பதிவில், ஹரிகிருஷ்ணாவின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு கடவுள் தைரியம் கொடுக்க வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

இப்படி பல நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.