சிம்புவுக்கு திருமணமா..?அதுவரைக்கும் வதந்திகளை நம்பதிர்கள்..!டி.ராஜேந்தர் அறிக்கை..

568

சிம்புவுக்கு திருமணமா..

சிம்புவின் திருமணம் குறித்து பல தகவல்கள் வெளியான நிலையில் அவரது தாய் தந்தையர் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.நடிகர் சிம்பு லண்டனைச் சேர்ந்த கோடீஸ்வரர் வீட்டுப் பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாகவும், கொரோனா பிரச்னைகள் முடிவடைந்த பின்னர் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் பரவின. ஆனால் இதில் உண்மையில்லை என்று டி.ராஜேந்தர் மற்றும் அவரது மனைவி உஷா அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது, “எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மைத்தன்மை அற்றவை.

எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிக்கை வாயிலாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன் அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.