சிறை தண்டனையோடு சேர்த்து மஹத்திற்கு மேலும் இப்படி ஒரு தண்டனையா! அதிர்ச்சியான பிக்பாஸ் போட்டியாளர்கள்

1036

பிக்பாஸ் நிகழ்ச்சி 2வது சீசன் ஐந்து வாரங்கள் முடிந்துள்ள நிலையில், இதுவரை அதிக பரபரப்பு இல்லாமல் தான் ஓடிக்கொண்டிருக்கிறது.பிக்பாஸ் போட்டியாளர்கள் தொடர்ந்து விதிமுறைகளை மீறி வருவதால் அவர்களுக்கு இன்று குறும்படம் போட்டு காட்டப்பட்டது.

மேலும் பலமுறை தொடர்ந்து மஹத் பிக்பாஸ் விதிமுறைகளை மீறியுள்ளதால் அவருக்கு சிறைதண்டனை வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி அவர் இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் நேரடியாக தேர்வாகியுள்ளார்.

அவர் சிறையில் இருக்கும்போது வீட்டில் யாரும் அவருக்கு உணவு வழங்கக்கூடாது என பிக்பாஸ் அறிவித்தார். இது மற்ற போட்டியாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.