வேலூர் கோட்டை வளாகத்தை திறந்தவெளி பாராக மாற்றியதுடன், போதையில் கோட்டை மேல் நின்று கும்மாளமடித்த கல்லூரி மாணவிகளை பார்த்து சுற்றுலா பயணிகள் முகம் சுளித்தனர்.
கலி முத்தி போச்சு என்று நாகரீகத்தின் பேரால் நடக்கும் அநாகரீக சம்பவங்களை பார்த்து நமது பெரியவர்கள் அலுத்துக் கொண்ட வரத்தைகளை உதிர்ப்பதுண்டு.
அதேபோன்ற ஒரு சம்பவம் வேலூர் கோட்டை வளாகத்தில் நடந்து, அது வீடியோ காட்சிகளாக வாட்ஸ்அப், முகநூல் மூலம் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டை வெளி பூங்கா அகழியை ஒட்டி அமைந்துள்ள கோட்டை மதில் மீது மூன்று கெண்கள் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக நடனமாடுகின்றனர்.
அவர்களில் ஜீன்ஸ் பேண்ட்டும், வெள்ளை நிற டி சர்ட்டும் அணித்த ஒரு பெண்ணின் கையில் பீர் பாட்டில் இருக்கிறது. அவர் ஓவென சத்தமிட்டு பீர் பாட்டில் மூடியை தனது பற்களால் கடித்து திறந்து பீரை குடிக்கின்றார்.
இரண்டு மடங்கு பீரை குடிக்கும் அந்த பெண் செல்போனில் படம் எடுக்கும தனது சக தோழியை பார்த்து எதுக்குடி வீடியோ எடுக்குற என்று கேட்கிறார். அதற்கு படம் எடுக்கும் அந்த மாணவி சும்மாதான் எடுக்கிறேன் என்கிறார்.
அதற்கு அடியே அதை யாருக்காவது அனுப்பிட போற ஜாக்கிரதை என்று கூறுகிறார்.
யாருக்கும் அனுப்ப மாட்டேன் என்று கூறும் அவர் தொடர்ந்து படம் எடுக்கதில் முனைப்பு காட்டுகிறார். அவருக்க மற்ற மூன்று மாணவிகளும் பாட்டிளை ஒருசேர பிடித்தும் பாட்டிலை மாறி மாறி வாங்கி குடித்தும் வீடியோ எடுக்க ஊக்கப்படுத்துகின்றனர்.
ஒருவழியாக பீர் பாட்டிலை காலி செய்யும் அவர்கள் போதையில் தள்ளாடி நடனமாடுகின்றனர். அப்போது கோட்டையை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் இவர்களை பார்த்து முகம் சுளித்தபடி சென்றனர்.
இந்த காட்சிகள் அனைத்தையும் அவர்கள் தைரியமாக செல்போன் மூலம் பதிவு செய்வது தான் வேடிக்கை.
இந்த வீடியோ தான் இப்பொழுது வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது போன்ற மாணவிகளின் நடத்தையை காணும் போது பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிப்பது எவ்வளவு அவசியம் என்பதை பெற்றோருக்கு உணர்த்துவதுடன், இன்றைய மாணவர் சமுதாயத்துக்கு கல்வியுடன், ஒழுக்கம், வாழ்வியல் சார்ந்த பாடங்களையும் கற்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
இன்றயைக்கு இது போன்று நடக்கும் சில பெண்களின் நிலைக்கு யார் காரணம்? சமூகத்தை இது எங்கு கொண்டு போய் விடும்? என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.