சுற்றுச்சூழல் கெடுவதை தடுக்கும் வகையில் புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு !

529

தற்போது பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. பயன்படுத்தப்பட்ட பின் வீசப்படும் அதன் கழிவுகள் மண்ணில் மக்கி போகாமல் பல ஆண்டுகளாக அப்படியே கிடக்கின்றன. எனவே, சுற்றுச்சூழல் கெடுவதை தடுக்கும் வகையில் புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. பெரும்பாலான பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி செய்ய முடியாதவை. தற்போது சில இடங்களில் பிளாஸ்டிக் பொருட்களை தவிரிக்க தொடங்கியுள்ளனர்.

கடைகளில் விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் கொலரோடோ மாகாண பல்கலைக்கழகத்தை சேர்ந்த வேதியலாளர்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத பிளாஸ்டிக்கை கண்டுபிடித்துள்ளனர்.

ஜப்பானின் கொயட்டா மற்றும் கெயோ பல்கலைகழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், பிளாஸ்டிக்கை மறு சுழற்சி செய்யும் ஆலையில் தொடர்ந்து நடத்திய ஆய்வில் பிளாஸ்டிக்கை அழிக்கக்கூடிய பாக்டீரியங்களை கண்டுபிடித்துள்ளனர்.

பிளாஸ்டிக்கின் மூலப்பொருளான பாலி எத்திலீன் டெராபைத்லேட்டை, இண்டோனெல்லா சகைஎன்சிஸ் என்ற பாக்டீரியா அழிக்கும் திறன் கொண்டது என கண்டறியபட்டுள்ளது.

அதாவது இந்த பாக்டீரியங்கள், நிலத்திலோ நீரிலோ உள்ள பிளாஸ்டிக்கை உட்கொள்கின்றன. இதனால் பிளாஸ்டிக் அழிக்கப்படுவதுடன் சுற்றுசூழல் மாசுபாடு தடுக்கப்படுகிறது.

இந்த பாக்டீரியாவால் மனிதனுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா என்று தற்போது ஆய்வுகள் நடந்து வருகின்றன. என்ன இருந்தாலும், பாக்டீரியா தொற்றை தடுக்க முடியும் என்பதால், பிளாஸ்டிக் அழிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.