செங்கல்பட்டு அருகே எரித்து கொலை செய்யப்பட்டவர் சென்னை பெண் என்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அவரது காதலன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த மே 28ஆம் தேதி காஞ்சிபுரம் செங்கல்பட்டு அருகே பழவேலி என்கிற ஊரில் அடையாளம் தெரியாத நிலையில் பெண்ஒருவர் எரித்து கொல்லப்பட்டு கிடந்தார். இந்நிலையில் அது கேரளாவில் காணாமல் போன மாணவியாக இருக்கலாம் என்கிற நோக்கில் செங்கல்பட்டு போலீசார் கேரளா போலீசாரை வரவழைத்தனர்.
அவர் கேரளா மாணவி இல்லை என்பது உறுதியான நிலையில் எரித்து கொல்லப்பட்ட பெண் சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் கொலை செய்த குற்றத்திற்காக காதலன் கைது செய்யப்பட்ட நிலையில் கொலைக்கு உதவி செய்த மற்றொரு இளைஞனையும் கைது செய்திருக்கின்றனர்.
இறந்த பெண்ணின் பெயர் பொக்கிஷ மேரி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலையின் நோக்கம் குறித்த விசாரணை மேலும் தொடர்கிறது.