சென்னைக்கு வந்த கேரள காதல் ஜோடி செய்த திடுக்கிடும் செயல் : வெளியான பின்னணி!!

529

கேரள காதல் ஜோடி

கேரளாவை சேர்ந்த இளம் காதல் ஜோடி சென்னை சென்னை ரயில் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்தில் நேற்றிரவு வாலிபர் ஒருவரும், இளம்பெண்ணும் மயங்கிய நிலையில் கிடந்தனர். பொலிசார் அவர்களை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். காதல் ஜோடியான இருவரும் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தது தெரிய வந்தது.

விசாரணையில் வாலிபரின் பெயர் அபிஜித் என்பதும், பெண்ணின் பெயர் ரூஷ்ணா என்பது இருவரும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

அபிஜித்தும், ரூஷ்ணாவும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில் அவர்களின் காதலுக்கு குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து சென்னை வந்து தற்கொலைக்கு முயற்சித்தது தெரிய வந்தது. இதுபற்றி அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.