சென்னையில் தனது சிறுவயது நண்பனை கொன்ற இளைஞர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
பிரபு(28) என்பவரும் சரவணன்(30) என்பவரும் நல்ல நண்பர்கள். சிறுவயது முதல் ஒன்றாக பழகியவர்கள். ஒரே இடத்திலும் வேலை செய்து வந்துள்ளனர்.
இருவரின் நட்பும் நெருக்கமாகி இருவரும் எங்கு போனாலும் இணைபிரியாமல் சென்று வந்துள்ளனர்.
6 மாத்துக்கு முன்னாள் இவர்கள் இருவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட்டு, அந்த பிரச்சனை பெரிதாகியுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு பிரபு மட்டும் கடையில் இருந்துள்ளார். அப்போது சரவணன் ஒரு முடிவோடு பிரபுவுடன் பேசி சண்டையிட்டுள்ளார்.
இதில் ஒரு கட்டத்தில் கோபமடைந்த சரவணன் பிரபுவின் வாய், காது, கையை கத்தியால் வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் பிரபு சம்பவ இடத்திலேயே பலியானார். நண்பனை கொன்ற சரவணனும் அதே இடத்தில் மின்விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
காலையில் கடையை திறக்கவந்த பெண் ஊழியர் இரண்டு ஊழியர்களும் பிணமாக கிடப்பதையும் பார்த்து அலறி அடித்து உரிமையாளருக்கு கூற அங்கு வந்த கடையின் உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரபு பேசாமல் ஒதுங்கி போனதால் சரவணனுக்கு ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த முடிவை எடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.