சொந்த அக்காவை கழுத்தை நெரித்து கொடூரமாக கொன்ற தம்பி : பதறவைக்கும் காரணம்!!

1244

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் உறங்கும் போது தொலைபேசியில் தொடர்ந்து பேசியதால், அக்காவை தம்பியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான மாணவி, தனது நண்பருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அதாவது பிற்பகல் தொடங்கி, இரவு வரை தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்துள்ளார். இதனால் உறங்கச் சென்ற அவரது 16 வயதான தம்பிக்கு மிகவும் தொந்தரவாக இருந்துள்ளது.

இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த திங்கள் அன்று நடந்த சண்டையில், அக்காவின் கழுத்தை தம்பி நெரித்துள்ளான். இதில் மூச்சுத் திணறி அக்கா உயிரிழந்துள்ளார். உடனே தனது நண்பர்களை அழைத்து, உடலை அப்புறப்படுத்தியுள்ளான்.

இதனை அருகில் இருந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் கவனித்துள்ளனர். உடனே பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிறுவனை கைது செய்தனர்.

அவன் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 302 மற்றும் 201 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறார் இல்லத்தில் அடைக்கப்பட்டான்.