ஜோதிடத்தில் கணிக்கப்பட்ட மரணம் : தனது உயிரை காப்பாற்ற கூலிப்படை உதவியுடன் மனைவியை கொன்று எரித்த கணவன்!!

827

மனைவியை கொன்று எரித்த கணவன்

தர்மபுரி மாவட்டத்தில் ஜோதிடரின் பேச்சை கேட்டு தனது இரண்டாவது மனைவியை எரித்து கொலை செய்து கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மூர்த்தியின் முதல் மனைவி சாலா, இவர்களுக்கு 2மகன்கள், 1மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4ஆண்டுகளுக்கு முன் இவரை பிரிந்து சாலா சென்று விட்டார்.

கடந்த ஓராண்டிற்கு முன், பெங்களூரை சேர்ந்த துர்காதேவி என்பவரை 2வதாக மூர்த்தி திருமணம் செய்து கொண்டார். கடந்த மாதம் மூர்த்தி ஜோதிடம் பார்த்துள்ளார்.

அப்போது துர்காதேவிக்கு நாக தோஷம் இருப்பதாகவும், அதன் மூலம் மூர்த்தியின் உயிருக்கு ஆபத்து எனவும் ஜோதிடர் கூறியுள்ளார்.

இதனால், கூலிப்படை உதவியுடன் மனைவியை கொலை செய்ய மூர்த்தி திட்டமிட்டுள்ளார். 3 பேருடன் சேர்ந்து மனைவியை கழுத்தறுத்து கொலை செய்து பெட்ரோல் ஊற்ற எரித்துள்ளார்.

இதையடுத்து கொலைக்கு காரணமான 3 பேருடன் சேர்ந்து மூர்த்தியும் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.