தனக்கு திருமணம் செய்து வைத்த புரோகிதருடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்!!

757

புரோகிதருடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்

இந்தியாவில் திருமணம் செய்து வைத்து புரோகிதருடன் புதுப்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் வினோத் மகாராஜ். திருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வினோத் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இளம் பெண் ஒருவருக்கும், இளைஞருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை புரோகிதராக இருந்து வினோத் தான் நடத்தி வைத்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அந்த புதுப்பெண் மாயமானார், அவரை குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் தேடிய போது வினோத்தும் மாயமானது தெரியவந்தது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் வினோத்துக்கும் அந்த பெண்ணுக்கும் இரண்டு ஆண்டுகளாக பழக்கம் இருந்த நிலையில் இருவரும் ஓடி போனது தெரியவந்தது.

போகும் போது தனது வீட்டில் இருந்த ஒன்றரை லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் ரூ 30000 பணத்தை புதுப்பெண் எடுத்து கொண்டு சென்றதும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.