தனது தாய் குளிப்பதை எட்டிப்பார்த்த நண்பன்: குத்திக்கொலை செய்த மகன்

979

ஆந்திராவில் தனது தாய் குளிப்பதை எட்டிப்பார்த்த நண்பனை குத்திக்கொலை செய்த மகனை பொலிசார் கைது செய்துள்ளனர்,சம்பத் குமாரின் நண்பர் அஜய் தேவ்ராஜ் அடிக்கடி வந்து இவரது வீட்டுக்கு செல்வது வழக்கம். கடந்த மாதம் இதேபோல் அஜய் தேவ்ராஜ், குளியலறையில் சம்பத்குமாரின் தாய் குளித்துக் கொண்டிருப்பதை எட்டிப்பார்த்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நண்பருடன் சேர்ந்து மதுகுடித்த சம்பத்குமார் போதையில் அஜய் தேவ்ராஜின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சம்பத்திடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அஜய் தேவராஜின் உடல் பிரத பரிசோதனைக்கு பின்னர் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.