தம்பிகளுடனேயே கள்ளக்காதல் லீலை : கணவனை கொன்று வீசிய மனைவி அதிர்ந்த போலீஸ்!!

1310

இராமநாதபுரம்….

இராமநாதபுரம் அண்ணன் தம்பிகளுடன் ஏற்பட்ட முறையற்ற உறவை தட்டிக்கேட்ட கணவனை, கள்ளக்காதலனை ஏவி விட்டு மனைவியே வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியையடுத்த சிங்கனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைக்கனி இவருக்கு சாந்தி என்பவருடன் திருமணமாகி ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

மூத்தமகன் கல்லூரி இரண்டாமாண்டும் இரண்டாவது மகள் பனிரெண்டாம் வகுப்பு மற்றும் கடைசி மகள் ஒன்பதாம் வகுப்பும் படித்து வரும் நிலையில் உள்ளூரில் டைல்ஸ் ஓட்டும் வேலை செய்து வந்த பிச்சைக்கனி குடும்ப வறுமை காரணமாக வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற அவர் மாதம் தவறாமல் குடும்பத்திற்கு பணம் அனுப்பி வந்த நிலையில், கணவர் அனுப்பும் பணத்தில் சேமிப்பதை தவிர்த்து செலவு செய்து தன்னை அழகு படுத்திக்கொள்வதிலேயே தனிக்கவனம் செலுத்தி வந்துள்ளார் சாந்தி. இந்த நிலையில் தம்பி உறவு முறை கொண்ட பார்திபன் என்பவருடன் எதேச்சையாக பழக்கம் ஏற்படவே இருவரும் செல்போன் எண்ணை மாற்றிக்கொண்டுள்ளனர்.

பிச்சைக்கனி வாங்கித்தந்த ஸ்மார்ட் போனில் வீடியோ காலில் வெறுமனே பேசுவதை மட்டும் வேலையாக கொண்டிருந்த சாந்தி தன்னுடைய குடும்பத்திற்காக வெளிநாடு சென்று உழைக்கும் கணவன் கட்டிய தாலியை கள்ளக்காதலனான தம்பிக்காக கழட்டி வைத்துவிட்டு ஒவ்வொரு முறை உடை மாற்றும்போதும் விதவிதமாக செல்ஃபி எடுத்து அனுப்பி அவரிடம் இருந்து கமண்ட் பெருவதிலும் தனிக்கவனம் செலுத்திய வில்லங்க காதல் ஜோடிகள் நேரம் கிடைக்கும்போதெல்லாம் சந்தித்து நெருக்கமாக தங்கள் காதலை வளர்த்துக்கொண்டுள்ளனர்.

பார்த்திபனும் மலேசியாவிற்கு சென்ற நிலையில், பார்திபனின் உடன் பிறந்த சகோதரனான கலை மோகன் என்பவனுடனும் காதல் செய்து வந்துள்ளார் சாந்தி இப்படியான முக்கோண காதலுக்கு இடையூறாக பிச்சைக்கனி கடந்த மே மாதம் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பவே அதிர்ச்சியடைந்துள்ளது கள்ளக்காதல் ஜோடிகள். இதனால் எங்கே தன்னுடைய சுதந்திரம் பறிபோய் விடுமோ என்று எண்ணிய சாந்தி அவசர அவசரமாக தன்னுடைய கணவன் கொடுத்த பணத்திலிருந்து 70 ஆயிரம் ரூபாயை பார்திபனுக்கு அனுப்பி விமான டிக்கெட் போட்டு கிளம்பி வா என்று கூறியுள்ளார்.

கடந்த சில நட்களுக்கு முன்னர் இரவில் கணவனுக்கு வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்த மதுபானத்தை ஊற்றி கொடுத்துவிட்டு , கலைமோகனுடன் நெருக்கமாக இருந்த போது, தூக்கம் கலைந்து எழுந்த பிச்சைக்கனி பார்த்து விடவே பிரச்சனை துவங்கியுள்ளது . இந்த நிலையில் அடுத்தநாள் காலையில் கலைமோகன் வந்து பிச்சைக்கனியை சமாதானம் செய்து இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்ற நிலையில் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை .

பிச்சைக்கனி எங்கே அவரது தந்தை மற்றும் சகோதரர்கள் கேட்டதற்கு அவர் வேலை பார்க்க தூத்துக்குடி சென்றிருக்கிறார் கோயம்புத்தூர் சென்றிருக்கிறார் என்று மழுப்பியிருக்கிறார். சந்தேகமடைந்த உறவினர்கள் இது தொடர்பாக தேவிபட்டினம் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர் புகாரின் மீது தேவிபட்டினம் போலீசார் நடவடிக்கை எடுக்க தாமதம் காட்டிவந்துள்ளனர். இதனையடுத்து பிச்சைக்கனியின் தந்தை உட்பட உறவினர்கள் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் புகாரளித்தனர் .

காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை உத்தரவின் பேரில் இராமநாதபுரம் டிஸ்பி வெள்ளைதுரை இதுதொடர்பாக விசாரணையில் இறங்கி பிச்சைக்கனி மனைவி சாந்தியின் செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது அவர் தொடர்ச்சியாக பார்திபன் மற்றும் கலைமோகனிடம் மணிக்கணக்கில் பேசியது தெரியவந்தது இதற்கிடையே தொடர்ந்து கண்காணித்த போலீசார் கலைமோகனை பிடித்து கிடுக்கி பிடியாக விசாரணை செய்யவே காணாமல் போன பிச்சைக்கனி குறித்த மர்மம் விலகியது .

பிச்சைக்கனியை கலைமோகன் தன்னுடைய அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை எனவும் எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம் என்று கூறி அழைத்து சென்று மது வாங்கி கொடுத்து அரசானூர் சீமை கருவேல மரங்களுக்குள் வைத்து வெட்டி கொலை செய்து உடலை வீசியிருப்பதாக கூறும் போலீசார் தொடர்ந்து கலை மோகனிடம் விசாரணை மேற்கொண்டு வருவதோடு, தப்பியோடிய பார்திபன் மற்றும் சாந்தியையும் வலைவீசி தேடி வருகின்றனர்.