தயவு செஞ்சு மீம்ஸ் போடாதீங்க…!நடிகர் விவேக் முன்வைக்கும் கோரிக்கை.

891

நடிகர் விவேக்…

கனவுகளின் நாயகன் என்று பலரும் அன்போடு அழைக்கும் அந்த பெயருக்கு சொந்தக்காரர் தான், மறைந்த முன்னாள் ஜனாதிபதியும் உலகம் போற்றும் விஞ்ஞானியுமான அய்யா அப்துல் கலாம் அவர்கள். ஏழ்மையில் கடுமையாக பயின்று, விஞ்ஞானத்தில் உலக அளவில் இந்தியாவை தலைநிமிரச்செய்த பலரில் அய்யாவிற்கும் பெரும் பங்குண்டு என்பது பலரும் அறிந்ததே. வாழ்நாள் முழுதும் இளம் சமுதாயத்தினரை மட்டுமே நம்பி தன்னுடைய கனவுகள் பலவற்றை விதைத்துச்சென்ற மாமனிதன் அவர் என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை.

பிரபல நடிகர் விவேக் அவர்கள் அய்யா கலாம் மீது மிகுந்த பற்று கொண்டவர். தமிழ் மொழியில் அய்யா கலாம் அவர்களை பேட்டிகண்ட ஒரே திரைப்பிரபலம் அவர் என்றாலும் அது மிகையல்ல. அவரோடு இணைந்து பல முறை மரம்நடும் விழாக்களில் கலாம் பங்கேற்றுள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்நிலையில் நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் மீம்களை உருவாக்குபவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட அந்த பதிவில் “மீம் creatorகள் யாரும் அய்யா கலாமின் படத்தை பிறரை ஏளனம் செய்யும் பதிவுகளில் பயன்படுத்த வேண்டாம். இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழும் அவரை தமிழகம் மிகவும் நேசிக்கிறது என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.