அதிர்ச்சி சம்பவம்

தமிழகத்தில் 8 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட முதியவரை பொலிசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஹனிபா (62). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இவர் தற்போது தன் 2 -வது மனைவி ரூபியாவுடன் வசித்து வருக்கிறார்.

இந்நிலையில் நேற்று ஹனிபா, தன் வீட்டுக்கு அருகே பாட்டியுடன் தனியாக வசித்து வரும் 8 வயது சிறுமி ஒருவரை அவர் தனியாக உள்ள நேரம் பார்த்து தன்னுடைய வீட்டின் மாடிப் பகுதிக்குக் கூட்டிச் சென்றிருக்கிறார். இதைக்கண்ட அப்பகுதியில் வசிக்கும் பெண்மணி ஒருவர், நடந்த சம்பவம் குறித்து அந்தச் சிறுமியின் பாட்டியிடம் கூறினார்.

அதைத்தொடர்ந்து அச்சிறுமியை அழைத்து பாட்டி விசாரித்தபோது, ஹனிபா அச்சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

பின்னர் சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து பொலிசார் ஹனிபா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.