தாயாரின் கண்முன்னே 5 வயது சிறுமிக்கு ஏற்பட்ட துயரம் : பரிதவிக்கும் குடும்பம்!!

861

சிறுமி

பிரித்தானியாவில் டோர்செட் பகுதியில் அமைந்துள்ள கடற்கரையில் தாயாரின் கண்முன்னே கடலலையில் சிக்கி 5 வயது மகள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டோர்செட் பகுதியில் அமைந்துள்ள Durdle Door கடற்கரையில் சோபியா(32) மற்றும் சகோதரி ஜூலிட் உடன் 5 வயது சிறுமி Rose Carter மாலை நேரத்தை கழிக்க சென்றுள்ளார். இந்த நிலையிலேயே திடீரென்று எழுந்த சக்தி வாய்ந்த அலை ஒன்று கடற்கரையில் நடந்து நின்ற சிறுமியை தாக்கி இழுத்துச் சென்றுள்ளது.

salisbury பகுதியை சேர்ந்த இந்த கார்ட்டர் குடும்பமானது சம்பவத்தன்று கடற்கரையில் நடக்க சென்றுள்ளனர். சோபியா கார்ட்டருடன் மகள் ஜூலியும், ரோசியும் கடற்கரையில் மிக அருகாமையில் இருந்த நிலையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அலையில் சிக்கி தடுமாறி விழுந்த சோபியா சுதாரித்துக் கொண்டு எழுந்து நின்றுள்ளார். ஆனால் 5 வயதேயான ரோஸ் கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டார். சம்பவத்தின்போது கடல் உக்கிரமாக இருந்தது எனவும், ஆனால் அது ஆபத்தானதாக மாறும் என கருதவே இல்லை என சோபியா பின்னர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

கடல் அலை தாக்கியதும் தடுமாறி விழுந்த தம்மை அங்கிருந்த நபர் ஒருவர் காப்பாற்றியதாகவும், சுதாரித்து எழுந்த தாம் அப்போது தமது மகள் கடலையில் சிக்குண்டு இழுத்துச் செல்வதை பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அங்கிருந்தவர்களை உதவி செய்ய கோரிய நிலையில் இளம்பெண் ஒருவர் சிறுமி ரோஸை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் அடுத்த அலை ஒன்று அவரையும் தாக்கியதால், அவரால் சிறுமியை காப்பாற்ற முடியவில்லை என தெரியவந்துள்ளது.

இதனிடையே மீட்புக்குழுவினர் மற்றும் அவசர உதவிக்குழுவினர் என சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டு, முடிவில் சிறுமியின் சடலத்தை மீட்டு கரையில் சேர்த்துள்ளனர்.

உடற்கூறு சோதனையில் சிறுமி நீரில் மூழ்கியதாலையே மரணமடைந்துள்ளதாக தெரியவந்தது. உக்கிரமான அலைகளுக்கு நடுவே சிறுமியை காப்பாற்ற தனியாளாக கடலில் குதித்த Seviour என்ற இளம்பெண்ணை கார்ட்டர் குடும்பத்தினர் பாராட்டியதுடன் நன்றியும் தெரிவித்துள்ளனர்.