தாயாரின் கண்முன்னே மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்!!

600

இந்தியாவின் கேரள மாநிலத்தில் குடும்ப பிரச்னை காரணமாக தாயாரின் கண்முன்னே மனைவியை வாளால் வெட்டி கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தின் கொச்சி நகரில் மனைவியை கொடூரமாக கொலை செய்த சாஜு என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கலூர் பகுதியில் தாயாருடன் வாடகை குடியிருப்பு ஒன்றில் குடியிருந்து வந்த ஷீபா உடன் கணவர் சாஜு கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு காரணமாக கோபமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்றிரவு வேலை முடிந்து குடியிருப்புக்கு திரும்பிய சாஜு, மீண்டும் மனைவியுடன் வாக்குவாதத்தி ல் ஈடுபட்டுள்ளார்.

ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த சாஜு வீட்டில் இருந்து வாள் பொன்ற கத்தியால் மனைவி ஷீபாவை கொடூரமாக தாக்கியுள்ளார்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்து நின்ற ஷீபாவின் தாயாரும் தாக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அச்சத்தில் வெளியேறிய சாஜு அருகாமையில் உள்ள மருத்துவமனையில் காயங்களுக்கு சிகிச்சை பெற முயன்றுள்ளார்.

இதனிடையே ஷீபாவின் அழுகை குரல் கேட்டு உதவிக்கு வந்த அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஷீபாவை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஷீபா மரணமடைந்துள்ளார். இதனிடையே ஷீபாவின் கணவரை மருத்துவமனையில் வைத்தே பொலிசார் கைது செய்துள்ளனர்.

குடும்ப பிரச்னை காரணமாகவே மனைவியை கொலை செய்ததாக சாஜு பொலிசாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.