தினம் அனுபவிக்கும் சித்ரவதை… காப்பாற்றுங்கள் என வீடியோ வெளியிட்டு அழுத அழகு நிலைய பெண்!!

1342

திருப்பூர்….

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி பிரவீனா. கணவர் வெளியூரில் வேலை பார்த்துவருகிறார். பிரவீனா மங்கலம் சாலை பகுதியில் பியூட்டி பார்லர் அழகு நிலையம் நடத்தி வந்தார். இந்த நிலையில் பிரவினாவின் தாய் சிலோ மீனா என்பவர் பல்லடம் பொலிசில் தனது மகளை இரண்டு நாட்களாக காணவில்லை அவளை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தார்.

புகாரின் அடிப்படையில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன பிரவீனாவை தேடி வந்தனர். பொலிசார் பிரவீனாவை தேடி வரும் நிலையில் ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது,

அதில் பிரவீனா பேசியிருப்பதாவது, தமிழ்செல்வி என்பவரது கணவர் சிவகுமார் டெக்ஸ்டைல்ஸ் தொழில் செய்யலாம் என்று என்னிடம் வீட்டை வங்கி கடன் வைத்து ரூ.75000 வரை பெற்று கொண்டார்.

மேலும் சுமார் 3 கோடி ரூபாய் பணம் வரை பெற்றுக்கொண்டார். தனது வீட்டு சொத்து பத்திரம் ஏலத்துக்கு வந்த நிலையில் பணத்தை திருப்பி கேட்க முயன்ற போது தொழில் விஷயமாக வெளியூர் அழைத்துச் செல்வதாக கூறி அழைத்துச் சென்று திருச்சி பகுதியில் தன்னை அடைத்து வைத்து சில பத்திரங்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டதாகவும், மேலும் தன் தாய் தந்தையிடம் தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தி விட்டார்.

என்னை எப்படியாவது சிவக்குமாரிடம் இருந்து காப்பாற்றி விடுங்கள். நான் உங்களை சொந்த அண்ணனாக நினைத்து கேட்கிறேன். அவன் என்னை ரொம்ப சித்ரவதை செய்கிறான்.

தினம் தினம் என்னை கெஞ்ச வைக்கிறான் என கண்ணீர்மல்க பேசியிருந்தார். இதையடுத்து பிரவீனாவை காப்பாற்றும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.