திரிஷாவை வேதனையாக்கிய கொடுமையான விஷயம்!

754

நடிகை திரிஷா சினிமாவில் ஒரு மூத்த நடிகை என்ற இடத்தை பிடித்துவிட்டார். பல முன்னணி பிரபல நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார். தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதைகளை தேர்ந்தெடுத்து வருகிறார்.

இதில் ஒன்று தான் அவர் நடித்துள்ள மோகினி. இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இப்படம் வரும் ஜூலை 27 ல் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு திரிஷா பேசினார். இதில் தினமும் காலையில் எழுந்து செய்திதாள்களை படித்தால் குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் பற்றி தான் அதிகமான செய்திகள் இருக்கின்றன. இது மனதிற்கு மிகவும் வருத்தமாக இருக்கின்றன. அதை படித்தால் நாள் முழுக்க அதே நினைவு தான் இருக்கின்றன என கூறினார்.