திருடனுக்கு உயிர்பயத்தைக் காட்டிய பயணிகள் : செல்போன் பறிக்க முயன்றவனுக்கு நேர்ந்த கதி!!

1405

பீகார்…..

ரயில் பயணியிடமிருந்து ஜன்னல் வழியாக மொபைல் போனைப் பறிக்க முயன்ற ஒரு நபர், கனவிலும் நினைத்துப்பார்க்காத ஒரு பயனைத்தை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டது. வெளியில் தொங்கிக்கொண்டு, மன்னிப்புக் கேட்டுகொண்டு, யாரிடம் செல்போனை பறிக்க முயன்றாரோ அவரிடமே உயிர்ப்பிச்சை கேட்டுக்கொண்டு அவர் பயணித்துள்ளார்.

Car Thief Car Robbery

பயணிகள் ஒருவகையில் அந்தத் திருடனை தண்டிக்க நினைத்தாலும், அவருக்கு படம் புகட்டி, அவரது உயிரையும் கைப்பறியுள்ளனர். செப்டம்பர் 14 அன்று வெளியான வீடியோ இந்தியாவின் பீகார் மாநிலத்தில் எடுக்கப்பட்டது, அங்கு ரயில் ஜன்னல்கள் வழியாக பணம் அல்லது செல்போன் போன்ற பொருட்கள் பறிக்கப்படுவது வாடிக்கையாக நடக்கும்.

பெகுசராயிலிருந்து ககாரியா வரை சென்றுகொண்டிருந்த ரயில், அதன் பயணம் முடிவடையும் தருவாயில் இருந்தபோது, ​​சாஹேப்பூர் கமால் ஸ்டேஷன் அருகே அந்த நபர் பயணி ஒருவரிடமிருந்து செல்போனை பறிக்க முயற்சித்துள்ளார். ஆனால் எச்சரித்துக்கொண்ட பயணி அதற்கு அவரது கையை பிடித்தார். ரயில் நகர்ந்தது, ​​​​திருடன் தன்னை விடுமாறு கெஞ்சினார், ஆனால் அதற்கு பதிலாக மற்றோரு பயணி அவரது இன்னொரு கையையும் உள்ளே இழுத்தபடி பிடித்துக்கொண்டார்.

தன்னை விட்டுவிடும்படி கேட்ட திருடன், இப்போது தனது கைகளை தயவுசெய்து விட்டுவிடவேண்டாம் என கெஞ்சி, தான செய்த குற்றத்திற்கு மன்னிப்பே கேட்டபடி, வேறு வழியில்லாமல் 15 கிலோமீற்றர்கள் வெளியே தொங்கியபடி பயணித்தார். அதுவரை பயணிகளும் அவரது கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டனர்.

இறுதியாக ரயில் ககாரியாவுக்கு அருகில் வந்தபோது அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் அங்கிருந்து எப்படியோ தப்பித்து ஓடிவிட்டார் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

பொலிஸ் இந்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுத்ததா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. திருடன் வெளியே தொங்கியபடி பயணித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.