திருமணத்திற்கு பின் குறையாத கவர்ச்சி.. கவர்ச்சியில் வாய்ப்பிளக்க வைத்த ரெபா மோனிகா!!

314

மலையாள சினிமாவில் முக்கிய ரோலில் நடித்து வந்தவர் நடிகை ரெபா மோனிகா ஜான். தமிழில் ஜருகண்டி என்ற படத்தில் ஜெய்யுடன் ஜோடியாக நடித்து அறிமுகமாகினார். அதன்பின் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார்.

பிகில் படத்தில் சிங்கப்பெண்ணாக நடித்து பிரபலமான ரெபா மோனிகா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நடித்து வருகிறார். கிளாமர் லுக்கில் நடித்தும் போட்டோஷூட் எடுத்தும் வந்த ரெபா மோனிகா கடந்த 2022ல் ஜோமொன் ஜோசப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பும் படங்களில் நடித்து வரும் ரெபா மோனிகா ஜான், தற்போது சகலகலா வல்லபா என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிரும் ரெபா, இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.