திருவாரூர்….

திருவாரூர் நகர்பகுதிக்கு உட்பட்ட வடக்குசேத்தி பஞ்சாயத்தில் விஏஓவாக சக்திவேல் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நமங்குளம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகள் தமிழ்லட்சுமி (20) என்பவருக்கும் திருமணமாகி 7 மாதங்களே ஆகிறது.

IT ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. போனஸ் மற்றும் பல சலுகைகள் அறிவிப்பு!
கணவன் மனைவி இருவரும் திருவாரூர் அருகே காட்டூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். வரதட்சணை தொடர்பாக இரு வீட்டார் இடையே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சக்திவேல் வீட்டுக்கு வேலை முடிந்து சென்று பார்த்தபோது வீடு உள்பக்கமாக தாழ் போடப்பட்டு இருந்தாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் கூப்பிட்டும் கதவு திறக்க படாத நிலையில், சந்தேக மடைந்த சக்திவேல் ஜன்னல் வழியாக பார்த்த போது தமிழ்லட்சுமி மின் விசிறியில் தூக்கிட்டு சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து திருவாரூர் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தமிழ்லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து தமிழ்லட்சுமியின் தந்தை கோவிந்தராஜ் தாலுக்கா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், எனது மகளுக்கும் சக்திவேலுவுக்கும் திருமணமாகி 7 மாதங்கள் ஆகிறது. திருமணத்தின் போது தேவையான அளவு சீர் செய்து உள்ளோம். இருந்தும் கூடுதலாக வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் எனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர். எனவே, உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என புகார் மனு அளித்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருமணமாகி 7 மாதங்களில் தமிழ்லட்சுமி தற்கொலை செய்து இறந்துள்ளதால் ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.