திருமணம் ஆகாமலேயே அம்மாவான பிரபல டிவி சீரியல் தயாரிப்பாளர் : நடிகரின் மகளுக்கு குவியும் வாழ்த்துக்கள்!!

1841

நடிகரின் மகளுக்கு குவியும் வாழ்த்துக்கள்

பாலிவுட் திரையுலகில் பல சீரியல்களையும், படங்களையும் தயாரித்தவர் ஏக்தா கபூர். இவரின் அப்பா ஜிதேந்திரா அதே சினிமாவின் பிரபல நடிகர். அம்மாவும் படத்தயாரிப்பாளர்.

ஏக்தாவுக்கு வெப் சீரிஸ் தயாரிப்பதிலும் ஆர்வம் அதிகம். இதயும் அவரி விட்டு வைக்கவில்லை. 40 வெப் சீரியல்களை தயாரித்திருக்கிறாராம். 43 வயதாகும் அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

ஆனால் வாடகை தாய் மூலம் இன்று குழந்தை பெற்றுக்கொண்டுள்ளார். அக்குழந்தை இன்று காலை பிறந்துள்ளது. இதற்காக அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே அவரின் சகோதரரும் இப்படியே கல்யாணம் செய்துகொள்ளாமல் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளார். இதற்கு காரணமும் ஏக்தா தானாம்.