துண்டாக கிடந்த மகனின் தலை.. கதறி அழுத தாய் : ஊருக்கு நடுவே நடந்த துணிகர கொலை!!

670

துணிகர கொலை

தமிழகத்தில் சமுதாய கூடத்தில் இளைஞர் ஒருவரின் தலை துண்டாக கிடந்ததால், பொலிசார் அந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலப்பாளையம் அருகே உள்ள வீரமாணிக்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி மேலப்பாலாமடையில் உள்ளார்.

இந்த தம்பதிக்கு 18 வயதில் பால்துரை என்ற மகன் உள்ளார். பால்துரைக்கு வேலை வெட்டி எதுவும் கிடையாது. இதனால் ஊரை சுற்றி கொண்டே தான் இருப்பாராம். இதன் காரணமாக அடிக்கடி தன் அம்மா வீட்டுக்கும் போய் வந்துள்ளார். அப்படி தான் வழக்கம் போல் தாயின் வீட்டிற்கு சமீபத்தில் சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை அந்த ஊருக்கு நடுவில் உள்ள சமுதாயக்கூடத்தில் ஒரு தலை மட்டும் துண்டித்து நிலையில் கிடப்பதைக் கண்டு அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின் இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் விசாரணை மேற்கொண்டதில், துண்டிக்கப்பட்ட தலை பால்ராஜின் தலை என்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து இந்த தகவல் அவரின் தாயாருக்கு தெரிவிக்கப்பட்டதால், மகனின் தலையை கண்ட அவர் கதறி அழுதார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், பால்ராஜின் தலையை இங்கே வைத்துச் செல்வதற்கு என்ன காரணம்? ஏதேனும் முன்விரோதம் இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.