துபாய்க்கு சுற்றுலா சென்ற இடத்தில் அத்து மீறிய இளம் பெண்: கிடைத்த தண்டனை தெரியுமா?

738

துபாய்க்கு சுற்றுலா சென்ற இடத்தில் இளம் பெண் போதையில் அத்துமீறியதால், அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.துபாய்க்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சென்று வருவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்ய பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார்.

அப்போது அவர் தன் நண்பர்களுடன் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். அதன் பின் அங்கிருந்த பாருக்கு சென்ற அப்பெண் போதையில் இன்னொரு சுற்றுலாப் பயணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

திடீரென்று அவரை அடித்ததால், ஹோட்டல் நிர்வாகத்தினர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், பெண்ணிடம் விசாரணை மேற்கொள்வதற்காக வெளியில் அழைத்து வந்துள்ளனர்.

அவர் வரமாடேன் என்று அடம் பிடித்ததுடன், பொலிசாரை அடித்து, கழுத்து மற்றும் கன்னம் போன்றவைகளை கடித்துள்ளார். அதுமட்டுமின்றி பொலிசாரின் வாகன கண்ணாடியையும் அடித்து உதைத்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த பெண்ணுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.