தொடர் பாலியல் புகார்கள் : அர்ஜுன் மன்னிப்பு கேட்கணும் : நடிகர் பிரகாஷ்ராஜ்!!

670

தொடர் பாலியல் புகார்கள்

நடிகர் அர்ஜுன் மீது தொடர் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகர் பிரகாஷ்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் அர்ஜூன் மீது நடிகை சுருதி ஹரிஹரன் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதையடுத்து துணை நடிகை ஒருவர், அர்ஜுன் தன்னிடமும், தனது தோழிகளிடமும் தவறாக நடந்து கொண்டார் என கூறினார்.

தன் மீதான குற்றச்சாட்டுகளை அர்ஜுன் மறுத்ததோடு இது தொடர்பாக வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த நடிகர் பிரகாஷ்ராஜ், அர்ஜுன் அனுபவம் வாய்ந்த நடிகர் என்பதை நாம் மறக்கக்கூடாது.

அதே நேரத்தில் பாலியல் புகார் கூறியவர்களின் மனநிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பாலியல் புகாரை அர்ஜுன் மறுத்தாலும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அது அவரது பெருந்தன்மையை காட்டும் என கூறியுள்ளார்.