அஞ்சலி ஜோசப்………

கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டம் இரட்டை ஆறு பகுதியை சேர்ந்த அஞ்சலி ஜோசப்.இவர் கடந்த 2014ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் போட்டியில் 400 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனையாவர். இவர் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை 2ம் ஆண்டு பயின்று வருகிறார்.

இந்நிலையில் கொரோனா காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளமையால் நாட்களை பயனுள்ளதாக மற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் அவரது கல்லூரி தோழிகளான ஆதிரா, சசி மற்றும் கீது மோகன் ஆகியோருடன் இணைந்து தினக்கூலி வேலை செய்து வருகின்றனர்.

இது குறித்து கருத்து கூறிய அவர்கள் கொரோனா ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக மாற்றவும் எங்கள் செலவுக்கான பணத்தை திரட்டவும் கூலி வேலை செய்து வருகிறோம்.மேலும் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கிடைக்க உள்ள அரசு வேலைக்காக காத்திருக்கிறோம்.

ஆதலால் அரசு விரைந்து அரசு பணிகளை தர வேண்டும் என கோரிக்கை வைத்த்துள்ளனர்.அஞ்சலி ஜோசப்பின் தோழிகளான ஆதிரா, சசி மற்றும் கீது மோகன் ஆகிய மூவரும் அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான தடகளப் போட்டியில் பதக்கங்களை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.