நடிகர் பார்த்திபன் வீட்டில் கிலோ கணக்கில் தங்க நகைகள் திருட்டு!!

867

நடிகர் பார்த்திபன் தனது வீட்டில் சுமார் ஒன்றரை கிலோ தங்க நகைகள் திருடுபோயிருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.சென்னை திருவான்மியூரில் உள்ள மேற்கு காமராஜர் நகரில் நடிகர் பார்த்திபன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் தனது வீட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகள் திருடுபோனதாக புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று மீண்டும் தனது வீட்டின் மற்றொரு அறையில் இருந்த நகைகள் திருடுபோயிருப்பதாக திருவான்மியூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

அதில், கடந்த ஏப்ரல் மாதத்தில் திருடுபோன நகைகளுடன் சேர்த்து இதுவரை மொத்தம் ஒன்றரை கிலோ தங்க நகைகள் திருடுபோயிருப்பதாக கூறியுள்ளார்.வீட்டுப் பணியாளர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்று பார்த்திபன் சந்தேகம் தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.இதுதொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.