நடிகை ஐஸ்வர்யா ராய் கல்லூரியில் எப்படி இருப்பார்? ரகசியத்தை உடைத்த தோழி

899

பிரபல பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராய்க்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர்.கர்நாடகாவில் நவம்பர் 1-ஆம் திகதி 1973-ஆம் ஆண்டு பிறந்த இவர், தற்போது பிரபல நடிகரான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து தன்னுடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

இந்த தம்பதிக்கு ஆரத்யா பச்சன் என்ற மகள் உள்ளார்.இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யாராயின் தோழியான சிவானி ஐஸ்வர்யா ராயின் கல்லூரி வாழ்க்கை குறித்து பகிர்ந்த தகவல்கள் இதோ, நான் மும்பையில் உள்ள ஜெய்ஹிந்த் கல்லூரியில் படித்து வந்தேன். ஐஸ்வர்யா ராய் அதன் பின்பு தான் எங்கள் கல்லூரியில் வந்து சேர்ந்தாள்.

எங்கள் கல்லூரிக்கு அருகில் தான் கே.சி.கல்லூரி இருக்கும். அப்போது அங்கிருக்கும் மாணவர்கள் ஐஸ்வர்யா ராயை பார்க்க வேண்டும் என்பதற்காகவே எங்கள் கல்லூரி வாசலில் வந்து நிற்பார்கள்.

ஐஸ்வர்யா ரயிலில் தான் கல்லூரிக்கு வருவாள், அதுமட்டுமின்றி ஐஸ்வர்யாவுக்கு நட்பு வட்டாரம் மிகவும் பெரிதாக இருக்கும் , கடைசி பெஞ்ச் மாணவி தான் அவளும் என்று கூறியுள்ளார்.

மேலும் ஐஸ்வர்யா ராயுக்கு architecture மீது தான் மிகவும் ஆர்வமாம், ஆனால் மொடலிங் உலகில் வந்து தற்போது மிகப் பெரிய நடிகை மற்றும் மிஸ் இந்தியா என்ற பட்டத்தையும் வென்றுள்ளார்.

பாலிவுட் நட்சத்திரங்களில் முதல் முறையாக Oprah Winfrey Show-விற்கு அழைக்கப்பட்ட நட்சத்திரமும் ஐஸ்வர்யா ராய் தான் என்பது குறிப்பிடத்தக்கது