பிரபல தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் தமிழ் தொடர்களில் நடித்து வந்த நடிகை பிரியங்கா நேற்று வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
முதற்கட்ட விசாரணையில், பிரியங்காவுக்கு குடும்பத்தில் சில பிரச்சனைகள் இருந்தது தெரியவந்துள்ளது. கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, அவர் மன வேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மதுரையை சேர்ந்த பிரியங்கா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர்தான் கூடைப்பந்து பயிற்சியாளர் அருண் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.ஆரம்பத்தில், அருண் தனது தொழிலில் பணம் சம்பாதிக்க அதிக சிரமப்பட்டுள்ளார், இதனால் தனியாக தொழிலும் செய்து வந்துள்ளார்.
மேலும், நடிகையாக இருக்கும் பிரியங்கா வீட்டிற்கு தாமதமாக வருவதை விரும்பவில்லை. வீட்டிற்கு தாமதமாக வராதே என பலமுறை பிரியங்காவை எச்சரித்துள்ளார் அருண். இதனால் இவர்கள் இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி விவாகரத்து செய்துகொள்வதற்காக, இவர்கள் இருவரும் ஒரு வழக்கறிஞரை சந்தித்து பேசியுள்ளதாகவும், ஆனால் இன்னும் விவகாரத்து மனு தாக்கல் செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.இதுகுறித்து பிரியங்காவின் கணவரிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.