நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலை செய்த பெண் : பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!!

395

திருப்பூர்….

திருநெல்வேலியை சேர்ந்தவர் தெய்வானை (வயது 45). இவருக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர் குடும்பத்துடன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூருக்கு வந்து கே.வி.ஆர் நகர் பகுதியில் வாடகை வீடு எடுத்து வசித்து வருகிறார்.

அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பணியின்போது உடன் பணிபுரிந்த நபருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் நட்பு கள்ளக்காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் கள்ளக்காதலனை திருமணம் செய்ய எண்ணிய தெய்வானை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தி வந்துள்ளார்.

ஆனால் அந்த நபர் ஏற்கனவே திருமணமானவர் என்பதால் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த நிலையில் கள்ளக்காதலனுடன் சேர்த்து வைக்க கோரி தெய்வானை ஏற்கனவே திருப்பூர் தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

புகாரை ஏற்ற காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தி இருவரையும் சமாதானம் பேசி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

தற்போது மீண்டும் தெய்வானை அந்த நபரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி போராடிய நிலையில் தெய்வானை கே.வி.பி பகுதியில் வீதியில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து பற்ற வைத்துக்கொண்டு நேற்று தற்கொலை செய்தார்.

இதுகுறித்து திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தப் பெண் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்து கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

குடும்ப பிரச்சனை மற்றும் தகாத உறவால் இந்த தற்கொலை நடந்துள்ளதாக காவல்துறையினர் முதற்கட்ட விசாரனையில் தெரிவித்துள்ளனர்.