நண்பனுடன் பேசிக்கொண்டிருந்த மாணவி – கதற கதற கூட்டு பலாத்காரம் செய்த அண்ணன் தம்பி 6 பேர்:

653

தஞ்சையில் தன்னுடன் பள்ளியில் பயிலும் நண்பனுடன் பேசிக்கொண்டிருந்த ஒரு 11ம் வகுப்பு மாணவியை அண்ணன், தம்பி உள்பட 6 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

தஞ்சை பர்மா காலனியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி, அவருடன் பள்ளியில் படிக்கும் மணிமாறன் என்பவனுடன் நெய்வாசல் ஆற்றங்கரையோரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

அவ்வழியாக வந்த ரவிச்சந்திரன் என்பவர் மாணவியின் நண்பனை அடித்து விரட்டிவிட்டு, அவரை அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் அவரது நண்பன் இளவரசனுக்கு போன் செய்து அழைத்துள்ளார். இளவரசனும் அவரது தம்பி உட்பட மொத்தம் 6 பேர் அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர்.

மாணவியின் சத்தம் கேட்ட சிலர் பொலிசுக்கு போன் செய்தனர். உடனடியாக அங்கு வந்த பொசிசார் இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்து மாணவியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.