நண்பர்கள் கொடுத்த திருமண பரிசு…. மேடையிலேயே கதறி அழுத மணமகன்!!

1414

கள்ளக்குறிச்சி…

கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவருக்கும் மதி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.

அதனைத் தொடர்ந்து நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மணமகனின் நண்பர்கள் திருமண பரிசு கொடுத்து அதனை திறந்து பார்க்குமாறு கூறியுள்ளனர்.

மணமகன் அறிவழகன் பரிசை திறந்தபோது இன்ப அதிர்ச்சியில் மேடையிலேயே கதறி அழுதார். அதற்கு காரணம் உயிரிழந்த அறிவழகனின் தந்தையின் உருவ படத்தை தான் சிறிய கட்-அவுட்டாக செய்து பரிசளித்துள்ளனர்.

பின்னர் ஆனந்த கண்ணீர்விட்ட மணமகனை அவரது நண்பர்கள் கட்டியணைத்து ஆசுவாசப்படுத்தினர்.

நண்பர்களின் இந்த செயல் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் மணமகனின் நண்பர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.