நயன்தாரா – சமந்தா…

நயன்தாரா அவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வரும் படமான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ குறித்து அவ்வபோது சில தகவல் வெளியாகி வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நயன்தாரா அவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வரும் படமான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ குறித்து அவ்வபோது சில தகவல் வெளியாகி வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நயன் காதலர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’.

இந்த படத்தில், ‘நானும் ரௌடி’ தான் படத்தை தொடர்ந்து, மீண்டும் விஜய்சேதுபதி, நயன்தாராவை வைத்து இயக்குகிறார் விக்னேஷ் சிவன், சமந்தாவும் மற்றொரு நாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் இந்த படம் குறித்து சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முதல் கட்டமாக ஹைதராபாத்தில் துவங்கி தொடர்ந்து நடைபெற்றது. இதுவரை சுமார் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட முடிவடைந்த நிலையில்,

திடீரென லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. எனினும் படப்பிடிப்புகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், புதுச்சேரியில் இறுதி கட்ட படப்பிடிப்பை எடுத்து முடித்துள்ளது படக்குழு.

புதுச்சேரி நயன் – விக்கி இருவருக்குமே மிகவும் பிடித்த இடங்களில் ஒன்று என்பதும், நானும் ரவுடி தான் படத்தின் போது இவர்களின் காதல் இங்கு தான் மெல்ல மெல்ல வளர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே தங்களுடைய சென்டிமெண்டுக்காக என்னவோ, இறுதி கட்ட படப்பிடிப்பை அங்கு நடத்தி முடித்தனர். அவ்வப்போது புதுவையில் படப்பிடிப்பு நடத்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலானது.

ஏற்கனவே ‘காத்து வாக்குலே ரெண்டு காதல்’ படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இரண்டாவது சிங்கிள் பாடல், வெளியாகும் என படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த நயன் – சமந்தா ரசிகர்களுக்கு இது செம்ம சர்பிரைஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
Everything #Twotwotwo ! 😍🥳#Kaathuvaakularendukaadhal single out on 18th Sep 💃🔥
A @VigneshShivN special composed by @anirudhofficial ! 💞@VijaySethuOffl #Nayanthara @Samanthaprabhu2 @Rowdy_Pictures @SonyMusicSouth pic.twitter.com/whEUaUywCl
— Seven Screen Studio (@7screenstudio) September 16, 2021