நாக சைத்தன்யா-சமந்தா தமிழ், தெலுங்கு சினிமாவின் இளம் கியூட் ஜோடி. திருமணத்திற்கு பிறகு இருவரும் பிஸியாக படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றனர்.
தான் சினிமாவிற்கு இடைவேளை விட இருப்பதாக சமந்தா கூறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்திருந்தார். இந்த நேரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சமந்தாவிடம் உங்கள் இருவரது கையில் இருக்கும் டாட்டூவிற்கு என்ன அர்த்தம் என்று கேள்வி கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், இந்த டாட்டூ நிஜ வாழ்க்கையையும், கணவன் மனைவியையும் குறிப்பதாகும். நாங்கள் திரைத்துறையில் இருந்தாலும் எப்போதும் எங்களுடைய நிஜ வாழ்க்கையைப் பற்றியும் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இந்த டாட்டூவைக் குத்தியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.