நிவர் புயல்………..

நிவர் புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்தில் மழைநீர் புகுந்துள்ளது.

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நிவர் புயலாக மாறியது. இன்று இப்புயல் அதிதீவிர புயலாக மாறி புதுச்சேரி அருகில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சூறைக்காற்றுடன் சென்னை உட்பட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் பெய்து வரும் மழையால் சாலையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து க டுமையாக பா திக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் க டுமையாக பா திக்கப்பட்டுள்ளனர்

இந்த சூழலில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் இல்லத்தில் மழைநீர் புகுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.
*நிவர் பீவர்… சென்னை கோபாலபுரம் கலைஞர் இல்லம்* pic.twitter.com/QXMEx3rkHa
— meenakshisundaram (@meenakshinews) November 24, 2020