நீங்களும், நடிகை சில்க் ஸ்மிதாவும் ஓர் அறையில் இருந்தால்? நடிகர் வினுசக்கரவர்த்தியின் பதில்!!

1962

சில்க் ஸ்மிதா

நடிகை சில்க் ஸ்மிதா இறந்து இன்றுடன் 22 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார். அக்கால ரசிகர்கள் மட்டுமல்ல, இக்கால ரசிகர்களும் சிலுக்குக்கு உண்டு!சில்க் ஸ்மிதாவை தென்னிந்திய சினிமாவுக்குக் கண்டுபிடித்துத் தந்தவர் நடிகர் வினுசக்கரவர்த்தி. வண்டிச்சக்கரம் படத்தில் சிலுக்கு ஸ்மிதாவாக அறிமுகப்படுத்தினார். காலப்போக்கில் சிலுக்கு என்ற பெயர் சில்க் ஸ்மிதா என்று மாறியது.

ஜேர்மன் நாட்டுக்கு ஒரு கலைவிழாவுக்காகப் போயிருந்தப்போ, `நீங்களும் சில்க் ஸ்மிதாவும் ஓர் அறையில் தனியாக இருக்கும் சூழ்நிலையில், உங்களுக்குள் என்ன மாதிரியான உறவு இருக்கும்?’னு கேள்வி கேட்டாங்க. அதுக்கு நான், `ஒரு வாத்தியாருக்கும் சீடருக்கு என்ன உறவு இருக்குமோ, அந்த உறவுதான் எங்களுக்குள்ள இருக்கும்’னு சொன்னேன். ஆனா, சில்க்குக்கும் எனக்கும் அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்தா, அவ எனக்கு மகளா பிறக்கணும்னு ஆசைப்படுறேன்’’ நெகிழ்ந்தவர் வினுசக்கரவர்த்தி.

ஆந்திரா மாநிலம் ஏலூருதான் சில்க் ஸ்மிதா பிறந்த ஊர். பூர்வீகம் தமிழகத்தில் உள்ள கரூர் என்கிறார்கள். இயற்பெயர் விஜயலட்சுமி. இவரின் சிறுவயதிலேயே அப்பா வீட்டைவிட்டு வெளியேற, வறுமையில் தள்ளாடியது குடும்பம். வறுமை வாழ்வு தந்த அழுத்தத்தால், சினிமாவில் நடிக்க இவரை சென்னைக்கு அழைத்துவந்தவர் அன்னபூரணி என்கிற உறவுக்காரப் பெண்மணி.

படிப்பில் சுட்டியாக இருந்தாலும் நான்காம் வகுப்புடன் நின்றுவிட்டது படிப்புவாசம். ஆனாலும் ஆங்கிலம் கற்பித்து, இவரை ஆங்கிலத்தில் பேசவைத்தார் நடிகர் வினுசக்கரவர்த்தியின் மனைவி.

நடிக்க வராவிட்டால் நான் ஒரு நக்சலைட் ஆகியிருப்பேன் என ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்தவர் சில்க். பதினைந்து வயது வரையிலான அவரின் வறுமை வாழ்க்கைத்தான் அவரை அப்படிச் சொல்லவைத்திருக்கிறது.

1980-களில் வெளிவந்த தமிழ் சினிமாக்களில் சில்க்கின் நடனம் இடம்பெறாத படங்கள் மிகக் குறைவு. இதில் ரஜினி, கமல் நடித்த படங்களும் அடக்கம். அந்தப் படங்கள் ரஜினி, கமலுக்காக ஐம்பது சதவிகிதம் வியாபாரமாகின என்றால், சில்க்கின் ஒரு நடனத்துக்காக மீதி ஐம்பது சதவிகிதம் வியாபாரமானது.

கிட்டத்தட்ட 450 படங்களில் நடித்து புகழ், பொருள் எல்லாம் கிடைத்திருந்தாலும் ஒருவித நிம்மதியின்மை சில்க்கைத் துரத்திக்கொண்டே வந்தது.

கடைசிக்காலத்தில் யாரை நம்புவது யாரை தூரத்தில் வைப்பது எனத் தெரியாமல் குழப்பத்தில் இருந்தார். அவருக்கு மனரீதியாக சில பிரச்னைகள் இருந்தன.

1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி தனது சாலிகிராமம் இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். இன்றுவரை அவரது மரணம் ஒரு மர்மமாகவே உள்ளது.